ஆன்மிகம்

ஆரணி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்

Published On 2019-06-11 05:39 GMT   |   Update On 2019-06-11 05:39 GMT
ஆரணி, சார்பனார்பேட்டை பகுதியில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத கில்லா வரதராஜபெருமாள் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது.
ஆரணி, சார்பனார்பேட்டை பகுதியில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத கில்லா வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. விழாவையொட்டி தினமும் இரவில் அன்னவாகனம், அனுமந்த வாகனம், நாகவாகனம், கருட வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது.

முன்னதாக உற்சவர் சாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவிலில் வலம் வந்து தேரில் ஏற்றப்பட்டது. பின்னர் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் பெரியகடை வீதி, மண்டி வீதி, மார்க்்கெட் ரோடு, காந்தி ரோடு, வடக்கு மாடவீதி, ஷராப்பஜார் வழியாக கோவிலை வந்தடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்களுக்கு நீர்மோர், குளிர்பானம், ஐஸ், அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News