ஆன்மிகம்

வழக்கறிஞர்கள் வழிபட வேண்டிய தெய்வம்

Published On 2019-06-10 07:26 GMT   |   Update On 2019-06-10 07:26 GMT
வாதாடும் வழக்கறிஞர்கள், நீதியரசர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு யோகபலம் பெற்றநாளில் சென்று வழிபட்டு வந்தால், வழக்கில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
மதுரை சொக்கநாதர் தன்னுடைய திருவிளையாடல்களில் பலவற்றை மதுரையிலேயே நடத்தியிருக்கிறார். அதில் ஒன்று வாதாடுதல். பாண்டியனின் அரசவை குருவான நக்கீரரோடு, புலவராக வந்த சிவபெருமான் வாதம் புரிந்ததாக ஒரு திருவிளையாடல் கதை சொல்கிறது. சிவபெருமானின் கவிதையில் நக்கீரர் குற்றம் கண்டுபிடித்த பொழுது, “சங்கறுப்பது எங்கள் குலம், சங்கரனாருக்கு ஏது குலம்?” என்று கேட்டு, “சங்கை அரிந்துண்டு வாழ்வோமே தவிர, உன்போல் இரந்துண்டு வாழோம்” என்றார்.

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் உள்ள பொற்றாமரைக் குளத்தின் அருகில், நெற்றிக் கண்ணைத் திறந்தாலும், குற்றம் குற்றமே! என்ற வாதாடும் சம்பவம் நடந்ததாக ஆலய வரலாறு சொல்கிறது. வாதாடும் வழக்கறிஞர்கள், நீதியரசர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு யோகபலம் பெற்றநாளில் சென்று வழிபட்டு வந்தால், வழக்கில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். மதுரையைப் போல வாதாடும் சம்பவங்கள் நடைபெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழக்கறிஞர்கள் வழிபட்டால் அவர்களது வாழ்வில் வளர்ச்சி ஏற்படும்.
Tags:    

Similar News