ஆன்மிகம்

வீட்டில் விளக்கேற்றும் பொழுது கவனிக்க வேண்டியவை

Published On 2019-06-10 04:55 GMT   |   Update On 2019-06-10 04:55 GMT
விளக்கை ஏற்றி ‘விளக்கே.. திருவிளக்கே..’ என்ற பாடலைப் பாடலாம் அல்லது எட்டு வகை லட்சுமியின் பெயர்களைச் சொல்லி ‘போற்றி,போற்றி’ என்று சொல்லலாம்.
சூரிய உதயத்தின் பொழுதும், மறையும் பொழுதும் விளக்கேற்றுவது நல்லது. வடக்கு பக்கம் வாசல் கதவை அடைத்து விட்டு விளக்கு ஏற்றவேண்டும் என்று முதியோர் சொல்வார்கள். காலையில் பிரம்ம முகூர்த்தம் சூரியன் உதிப்பதற்கு முன் 48 நிமிடம். மாலையில் கோதுளி முகூர்த்தம் சூரியன் மறைந்தபிறகு 48 நிமிடம்.

காலையில் விளக்கு ஏற்றுவது கல்வியறிவு கிடைக்க வேண்டும் என்பதற்காக.. மாலையில் விளக்கு ஏற்றுவது செல்வ வளம் வேண்டும் என்பதற்காக.. பிரம்ம முகூர்த்தம் என்பது மூளையில் கல்வியை ஏற்கும் பாகம் செயல்படும் நேரம்.

விளக்கை ஏற்றி ‘விளக்கே.. திருவிளக்கே..’ என்ற பாடலைப் பாடலாம் அல்லது எட்டு வகை லட்சுமியின் பெயர்களைச் சொல்லி ‘போற்றி,போற்றி’ என்று சொல்லலாம். பிரம்ம முகூர்த்தத்தில் நாம் தொடங்கும் காரியங்கள் வெற்றியடையும். அதனால்தான் இல்லம் கட்டிக் குடியேறுபவர்கள் பிரம்ம முகூர்த்தத்தில் கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை செய்வார்கள்.
Tags:    

Similar News