ஆன்மிகம்

மகாவிஷ்ணுவின் வாமன அவதாரம்

Published On 2019-06-06 06:30 GMT   |   Update On 2019-06-06 06:30 GMT
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று வாமன அவதாரம். மகாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று வாமன அவதாரம். மகாவிஷ்ணுவின் மீது பக்தி கொண்ட அசுரர்களின் தலைவராக இருந்தவர் மகாபலி சக்கரவர்த்தி. அவர் மிகப்பெரிய யாகம் செய்த பலருக்கும் தானம் செய்ய முன்வந்தார்.

இதனால் மகாபலியின் சக்தியும் அசுர குலத்தின் பலமும் அதிகரிக்கும் என்று அஞ்சிய தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் சரணடைந்தனர். இதையடுத்து விஷ்ணு, வாமனராக குள்ளமான உருவம் கொண்டு மகாபலி சக்கரவர்த்தி தானம் வழங்கும் இடத்திற்குச் சென்றார். பின்னர் அங்கிருந்த மகாபலியிடம் தனக்கு மூன்றடி மண் மட்டும் தரும்படி கேட்டார். மகாபலி அதற்கு ஒப்புக்கொண்டார்.

அப்போது மிகப்பெரிய உருவம் கொண்ட வாமனர், தன்னுடைய காலால் முதலில் பூமியை அளந்தார். இரண்டாவது அடியில் வானத்தையும் அளந்து முடித்தார். மூன்றாவது அடியை வைப்பதற்கு இடம் இல்லை. “மூன்றாவது அடியை எங்கே வைப்பது?” என்று மகாபலியிடம் கேட்டார்.

அதற்கு மகாபலி, தன்னுடைய தலையில் வைக்கும்படி கூறினார். அவரது தலையில் தன் காலை வைத்து பாதாளத்திற்குள் அழுத்தினார் வாமனர். பின்னர் அவருக்கு அருள்புரியும் விதமாக, பாதாள உலகத்தில் இருந்து அரசாட்சி செய்து வரும்படி பணித்தார்.
Tags:    

Similar News