ஆன்மிகம்

சாம்பலை பிரசாதமாக வழங்கும் ஆலயம்

Published On 2019-06-06 05:08 GMT   |   Update On 2019-06-06 05:45 GMT
பக்தர்களுக்கு சாம்லே பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. அந்த கோவில்கள் எங்குள்ளது, சாம்பல் பிரசாதமாக வழங்குவதற்கான காரணத்தையும் அறிந்து கொள்ளலாம்.
தட்சனின் மகளாகப் பிறந்த பார்வதி தேவி, தாட்சாயிணி என்ற பெயருடன் வளர்ந்தாள். அவளை சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார். தட்சன், சிவபெருமானை அழைக்காமல் ஒரு யாகத்தை நடத்தினான்.

அந்த யாகத்திற்குச் சென்ற தாட்சாயிணி, யாகத்தில் விழுந்து தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டாள். அந்த இடம் மேல்மலையனூர் என்று சொல்லப்படுகிறது. இங்குள்ள அம்மன் கோவிலில் சாம்பலே பிரசாதமாக வழங்கப்படுகிறது.

அதே போல் சாம்பலை பிரசாதமாக வழங்கும் மற்றொரு தலம், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலாகும்.
Tags:    

Similar News