ஆன்மிகம்

வால்மீகியை பற்றி அறிந்து கொள்ளலாம்

Published On 2019-06-05 08:42 GMT   |   Update On 2019-06-05 08:42 GMT
இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம் என்ற பெரும் காவியத்தை எழுதியவர் வால்மீகி முனிவர். இவருக்கு இந்த பெயர் வருவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம் என்ற பெரும் காவியத்தை எழுதியவர் வால்மீகி முனிவர். இவர் காட்டில் வாழும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவராக இருந்தார். மேலும் தன்னுடைய குடும்பத்திற்காக வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு தன் வாழ்க்கையை நடத்தி வந்தார்.

அவரை சந்தித்த தேவ முனிவரான நாரதர், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய, ராமனின் பெயரை உச்சரித்து தவம் இயற்றும்படி கூறினார். இதையடுத்து அவர் ராமனை நினைத்து தவம் இயற்றினார். நீண்ட நெடுங்காலமாக அசையாமல் இருந்து தவம் செய்த காரணத்தால், அவரது உடலை எறும்பு புற்று மூடியது.

இறுதியில் அவருக்கு இறைவன் காட்சி தந்து உயர்ந்த நிலையை வழங்கினார். எறும்பு புற்றுக்கு ‘வால்மீகம்’ என்ற பெயர் உண்டு. புற்றுக்குள் இருந்து வெளிப்பட்டவர் என்பதால் இவர் ‘வால்மீகி’ என்று பெயர் பெற்றார்.
Tags:    

Similar News