ஆன்மிகம்
தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து செல்லும் பக்தர்களை படத்தில் காணலாம்.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம்

Published On 2018-05-30 11:15 IST   |   Update On 2018-05-30 11:15:00 IST
தஞ்சை காமராஜர் மார்க்கெட் வியாபாரிகள் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலுக்கு ஊர்வலமாக பால்குடம் எடுத்துச்சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
தஞ்சை காமராஜர் மார்க்கெட் காய்கனி வர்த்தக சங்கம் சார்பில் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலுக்கு 43-வது ஆண்டு பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்துக்கு தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கோவிந்தராஜ், அன்வர், கலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலம் தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள சிவகங்கை பூங்காவில் இருந்து புறப்பட்டு மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதி வழியாக சென்று புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலை அடைந்தது. இதில் 100 பால்குடம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. ஊர்வலத்துக்கு முன்னதாக வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் எடுத்துச்செல்லப்பட்டது.

ஊர்வலம் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலை அடைந்ததும் அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கோவில் அருகே உள்ள மண்டபத்தில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன. இதில் வியாபாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News