வழிபாடு
திருப்பதி கோவிலில் சாமி தரிசனத்திற்கு 18 மணி நேரமாகிறது
- வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 18 குடோன் நிரம்பியது.
- ரூ.4.56 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
ஏழுமலையான் கோவிலில் நேற்று 78,349 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 39 ஆயிரத்து 634 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.56 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 18 குடோன் நிரம்பியது.
நேரடி இலவச தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படாததால் இலவச தரிசனத்திற்கு நீண்ட நேரமாகிறது.