ஆன்மிகம்
சிவன்

புரட்டாசி மாத பிரதோஷ விரதம்

Published On 2019-10-11 05:17 GMT   |   Update On 2019-10-11 05:17 GMT
புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷ தினத்தன்று சிவபெருமானை விரதம் இருந்து வழிபடும் முறை குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.
புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் விரதம் இருப்பது சிறப்பு. பால், பழம் சாப்பிட்டும் அன்றைய தினத்தில் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம். இன்று மாலை பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து சிவபெருமான், நந்தி பகவான் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களை வணங்க வேண்டும்.

பிறகு நந்தி தேவருக்கு அருகம்புல், வெல்லம் கலந்த அரிசியையும், சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தந்து, பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும். பிரதோஷங்களில் சனிக்கிழமை அன்று வருகின்ற சனி பிரதோஷம் மிகவும் சிறப்பானது.

இன்று சிவபெருமானை விரதம் இருந்து வழிபடுவதால் அஷ்டம சனி, ஜென்ம சனி போன்ற சனி கிரக தோஷங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு பாதகங்கள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும். எனவே அன்றைய தினத்தில் பிரதோஷ வழிபாடு தவறாமல் செய்வதால் நீங்கள் எண்ணிய காரியங்கள் ஈடேறும். 
Tags:    

Similar News