சந்தனக்கூடு ஊர்வலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளின்படி பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. விழாவில் 2 தவணை தடுப்பூசி செலுத்திய 40 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இரவு 10 மணிக்கு மேல் ஊரடங்கு என்பதால் நாகை மற்றும் நாகூரில் உள்ள தெருக்களுக்கு செல்லாமல் சந்தனக்கூடு ஊர்வலம் நேரடியாக நாகூர் அலங்கார வாசலை சென்றடைந்தது. அதைத்தொடர்ந்து தர்காவில் நடந்த நிகழ்ச்சியில் கொரோனா பரிசோதனை மற்றும் 2 தவணை தடுப்பூசி செலுத்திய 40 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
சந்தனக்கூடு ஊர்வலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளின்படி பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. வழக்கமாக கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம் என்றாலே நாகை மற்றும் நாகூர் நகர பகுதிகள் முழுவதும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நாகை, நாகூர் பகுதிகள் களையிழந்து காணப்பட்டன. நாகூர் தர்கா பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.