நாக தோஷங்களில் சக்தி வாய்ந்ததாக கூறப்படுவது இந்த காலசர்ப்பதோஷம் தான். இந்த தோஷத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள ஒரு எளிமையான பரிகாரம் உண்டு.
அதிலும் இந்த கால சர்ப்ப தோஷம், ராகு கேது தோஷங்கள் இருந்தால் சொல்லவே வேண்டியதில்லை. நம்மை படாதபாடு படுத்தி எடுக்கத்தான் செய்யும். ஆனால் இதிலிருந்து விடுபடுவதற்கான வழியினை நம் முன்னோர்கள் நமக்கு கூறிவிட்டுத் தான் சென்றுள்ளார்கள். கால சர்ப்ப தோஷம், ராகு-கேது தோஷம் உள்ளவர்களுக்கு இந்த பதிவானது நல்ல பலனை கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை தொடங்கலாம்.
நாக தோஷங்களில் சக்தி வாய்ந்ததாக கூறப்படுவது இந்த காலசர்ப்பதோஷம் தான். இந்த தோஷத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள ஒரு எளிமையான பரிகாரம் உண்டு. ஒரு ஜாதகத்தில் ராகுவுக்கும் கேதுவுக்கும் இடையே எல்லா கிரகங்களும் சிக்கிக்கொண்டால் அது கால சர்ப்ப தோஷமாக கூறப்படுகிறது. லக்னத்தில் ராகு, 7ஆம் இடத்தில் கேது, மற்றும் இரண்டாம் இடத்தில் ராகு, எட்டில் கேது இப்படி இருந்தால் இது சர்ப்ப தோஷமாக கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட ஜாதகத்தை கொண்டவர்களுக்கு திருமண சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், திருமணம் முடிந்தாலும் மனைவியிடையே ஏற்படும் பிரச்சினைகள், சிலருக்கு எந்தக் காரியத்தை எடுத்தாலும் அது வெற்றியை நோக்கிச் செல்வது போல இருக்கும், ஆனால் தோல்வியில் முடியும். இப்படிப்பட்ட ஜாதகக்காரர்கள், இரண்டு பாம்புகள் பின்னி இருக்கும் சிலையை நாகபஞ்சமி தினத்தன்று, கோவிலில் பிரதிஷ்டை செய்தால் நாகதோஷம் நீங்கும் என்பது பாரம்பரியமாக இருந்து வரும் நம்பிக்கை.