ஞாயிற்றுக்கிழமை அன்றும், சூரிய நமஸ்காரம் செய்யும் நாட்களிலும், குறிப்பாக கதிரவனுக்கு விழா எடுக்கும். பொங்கல் திருநாள் அன்றும் நாம் படித்து வழிபட வேண்டிய பாடல்..
செல்வம் வழங்கும் செங்கதிரே போற்றி!
உயிர்களைக் காக்கும் உத்தமா போற்றி!
நலங்களை வழங்கும் ஞாயிறே போற்றி!
குலம் தழைக்க வைக்கும் கோவே போற்றி!
ஆற்றலை வழங்கும் ஆதவா போற்றி!
நவக்கிரகங்களின் நாயகா போற்றி!
ஞாலம் போற்றும் வாழ்வை வழங்க
வாழும் வாழ்வில் வளங்கள் சேர
உன்னைத் துதித்துப் போற்றுகின்றேன் நான்
ஒளிமயமான வாழ்வை வழங்கு.