காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி என்று கலந்தாய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் வைகுண்ட ஏகாதசியான வருகிற 13- ந் தேதியன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். 14- ந்தேதி முதல் 18-ந் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும், சொர்க்கவாசல் வழியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். சொர்க்க வாசலுக்குள் வரும் பக்தர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் கோவில் ஸ்தலத்தார்கள், வேதவியாச ஸ்ரீசுதர்சன பட்டர், மிராசுதாரர்கள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் கோவில் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.