செவ்வாய் வக்ரம் பெற்ற பெண்கள் மன நிறைவான மணவாழ்வு அமையவில்லை என்றே கூறுகிறார்கள். இவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
பெண் ஜாதகத்தில் செவ்வாய் சுப ஸ்தானத்தில் வலிமையுடன் இருந்தால் புகுந்த வீட்டில் தனக்கென்று ஒரு தனி ராஜாங்கம் அமைத்து குடும்ப உறுப்பினர்களை தன் வசப்படுத்தி முடிசூடா ராணியாக வாழ்நாள் முழுவதும் திகழ்கிறார்கள். செவ்வாய் வலிமையற்ற பெண்கள் பலருக்கு திருமணம் நடத்துவதில் சிரமம் இருக்கிறது. திருமணம் நடந்த பிறகு திருமணமே செய்யாமல் வாழ்வை கழித்து இருக்கலாமே என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
செவ்வாய் வக்ரம் பெற்ற பெண்கள் மன நிறைவான மணவாழ்வு அமையவில்லை என்றே கூறுகிறார்கள். இவர்களுக்கு செவ்வாயின் தசாபுத்தி காலங்களில் முன் கோபம் மிகுதியாகும். திட்டமிடுதலில்-ஆலோசகராக இருப்பதில் சாதனை புரிவர். ஆனால் செயல்திறன் இருக்காது. உடன் பிறந்த சகோதரர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்காது.
வீடு, வாகனம், சொத்து தொடர்பான சர்ச்சைகள் இருக்கும். ரத்தம் தொடர்பான நோய்கள் ஏற்படும். வக்ர செவ்வாய் சனியுடன் சம்பந்தம் பெறும் போது விபத்து / காயம் ஏற்படும்.
பரிகாரம்: பழனி தண்டாயுதபாணி சுவாமியை வழிபட வாழ்வின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகி மன நிறைவான மண வாழ்க்கை கிட்டும்.