சிங்காரவேலருக்கு, பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர், திரவியப்பொருட்கள் உள்ளிட்டவைகளால் அபிஷேக, ஆராதனை நடந்தது. அதை தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆறுமுகக் கடவுளுக்கும், வெளிபிரகாரத்தில் உள்ள மேலக்குமரருக்கும், கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர்கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு, தோப்புத்துறை கைலாசநாதர்கோவிலில் முருகனுக்கும், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவிலில் முருகனுக்கும், நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் சுப்பிரமணியருக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது. கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். வாய்மேடு பழனியாண்டவர் கோவிலில் முருகனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.