திருவேடகம் ஏடகநாதர் கோவில் இறைவனை வழிபட்டால் பில்லி, சூனியம் நீங்கும் என்கிறார்கள். இத்தல இறைவியான ஏலவார்குழலி அம்மை, பெண்களின் குறைகளை நீக்கும் தாயுள்ளம் படைத்தவளாகத் திகழ்கிறாள்.
இத்தல இறைவனை வழிபட்டால் பில்லி, சூனியம் நீங்கும் என்கிறார்கள். இத்தல இறைவியான ஏலவார்குழலி அம்மை, பெண்களின் குறைகளை நீக்கும் தாயுள்ளம் படைத்தவளாகத் திகழ்கிறாள்.
இந்த ஆலயத்தின் தல விருட்சம், வில்வ மரம் ஆகும். இங்குள்ள தீர்த்தம், ‘பிரம்ம தீர்த்தம்.’ இந்த நீரையே இறைவனை அபிஷேகம் செய்வதற்காக பயன்படுத்துகிறார்கள்.