திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் சுமார் 3 அடி, 2 அடி உயரத்தில் 2 பழமையான சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது அந்த சிவலிங்கங்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.
இந்தநிலையில் இந்த கோவிலின் 3-வது பிரகாரத்தில் குபேர லிங்கேஸ்வரர் சன்னதி அருகே உள்ள சுற்றுச்சுவரை இடித்து புனரமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, சுற்றுச்சுவர் அருகே இருந்த புதரில் நேற்று காலை சுமார் 3 அடி, 2 அடி உயரத்தில் 2 பழமையான சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டன.
தற்போது அந்த சிவலிங்கங்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. அதனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கோவில் வளாகத்திலுள்ள நெற்களஞ்சியம் அருகே தங்ககாசு புதையல் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.