கன்னியாகுமரி அருகே உள்ள முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியில் திருஏடு வாசிப்பு திருவிழாவின் 15-வது நாளான நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பு நடக்கிறது.
திருஏடு வாசிப்பு விழா 20-ந் தேதி வரை 17 நாட்கள் நடக்கிறது. 15-வது நாளான நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பு நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். 20-ந்தேதி பட்டாபிஷேக விழா நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியின் தலைமை தர்மகர்த்தா பாலசுந்தரம் மற்றும் தர்மகர்த்தா செல்வராஜ் ஆகியோர் செய்துள்ளனர்.