பெரணமல்லூர் ஒன்றியம் இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திர மகா யாகம் நடந்தது. இதில் பக்தர்கள் முககவசத்துடன் கலந்து கொண்டனர்.
இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திர மகாயாகம்
பதிவு: டிசம்பர் 12, 2020 11:30
இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திர மகாயாகம்
பெரணமல்லூர் ஒன்றியம் இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திர மகா யாகம் நடந்தது. முன்னதாக காலையில் வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், கல்யாண லட்சுமி நரசிம்மர், ராமர், லட்சுமணர், சீதாதேவி, ஆண்டாள், சக்கரத்தாழ்வார் ஆகிய சாமிகளுக்கு திருமஞ்சனம் நடந்தது.
பின்னர் அலங்காரம் செய்து சீனிவாச பெருமாள், பெருந்தேவி, பூதேவி தாயாரை யாக மண்டபத்தில் வைத்து, 27 நட்சத்திரம் அரிசி மூலமாக வரைந்தனர். தொடர்ந்து 108 கலசம் வைத்து கோவில் நிர்வாகி பாலாஜி தலைமையில் 17 பட்டர்கள் கலந்து கொண்டு சிறப்பு மகா யாகம் நடத்தினர். இதில் பக்தர்கள் முககவசத்துடன் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மஞ்சள் கயிறு, அன்னதானம் வழங்கப்பட்டது.