இந்த ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்து வந்தால் திருமணமாகாத கன்னியர்க்கு, தடைகள் எல்லாம் நீங்கி, நல்ல கணவர் அமைவார்கள் என்பது நம்பிக்கை.
கன்னியருக்கு மனம்போல் மாங்கல்யம் அமைய இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்க...
பதிவு: டிசம்பர் 02, 2020 09:22
ஆண்டாள்
அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்
அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:
தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நா
தந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:
கோதா ஸ்துதி
பொதுப்பொருள்:
ஆண்டாள் தேவியே, உனக்கு வந்தனம். சாத்திரங்கள் அனுமதிக்காத பாகவத அபசாரங்கள் பலவற்றை நெடுங்காலமாக நாங்கள் செய்து வருகிறோம். ஆனாலும் எங்களுக்கெல்லாம் தங்கள் கணவரான அரங்கத்துப் பெருமாள் திருவருள் புரிகிறார். தவறு செய்யும் எங்களுக்கும் பெருமாள் அருளும் காரணம் என்னவாக இருக்கும்? அது, நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிருப்பதால்தான். அது மட்டுமல்லாமல் வீணையின் நாதம் போன்ற உன் குரலால் தீந்தமிழில் பிரபந்தமும் பாடித் துதித்திருக்கிறாய். அதனாலேயே உன் குழந்தைகளாகிய எங்களை பெருமாள் தண்டிக்காமல் விட்டிருக்கிறார். அதற்காக ஆண்டாள் தேவியே உனக்கு மீண்டும் வந்தனம்.