பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் கோ பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அதைத்தொடர்ந்து பசுக்களை கொண்டு வந்து, பக்தர்கள் குங்குமம், மஞ்சள், பொட்டு வைத்தனர். பின்னர் மாலை அணிவித்து, பட்டுப்புடவைகள் போர்த்தி கோவில் பட்டாச்சாரியார் பாலாஜி கற்பூர ஆராதனை காண்பித்தார். இதில் பக்தர்கள் கலந்துகொண்டனர்.