"ஆலயம் புருஷாகாரம்' என்று ஆகம சாஸ்திரம் கூறுகிறது "மனித உடலைப் போன்றது கோவில்' என்பது இதன் பொருள்.
அதனைத் தொடர்ந்து வயிற்றுப் பகுதியில் நாபி எனப்படும் தொப்புள் பகுதியாக இருப்பது கொடிமரம். ராஜகோபுரம் இறைவனின் திருவடி. திருவிழா காலத்தில் தேவர்களை அழைப்பதற்காக கொடிமரத்தில் கொடியேற்றி வழிபாடு நடத்துவர்.