கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதேபோல் மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த பூஜையில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது.