அம்புஜவல்லி உடனாய ஆதிவராகப் பெருமாள் திருக்கோவில் என்று அழைக்கப்படும் இத்தலத்தில், மூலவராகவும் உற்சவராகவும் ஆதிவராகப் பெருமாள் வீற்றிருக்கிறார்.
உலகில் முதலில் தோன்றிய இடம் ‘வராகபுரி’ என்னும் கும்பகோணம் என்று இந்தக் கோவில் தல புராணம் சொல்கிறது. எனவே முதலில் இந்தக் கோவிலில் உள்ள ஆதிவராகப் பெருமாளை வழிபட்ட பிறகே, அனைத்து தெய்வங்களையும் வழிபட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். அம்புஜவல்லி உடனாய ஆதிவராகப் பெருமாள் திருக்கோவில் என்று அழைக்கப்படும் இத்தலத்தில், மூலவராகவும் உற்சவராகவும் ஆதிவராகப் பெருமாள் வீற்றிருக்கிறார். தாயார் பெயர் அம்புஜவல்லி.