நாகை அருகே நாகூர் சில்லடி தர்காவில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் இல்லாமல் எளிமையான முறையில் சில்லடி தர்காவில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்து இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். சந்தனம் பூசும் நிகழ்ச்சி வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.