சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில், ஊரடங்கு காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
மக்கள் நலன் கருதியும், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் காக்க வேண்டியும் நடந்த இந்த சிறப்பு பூஜையில், ஊரடங்கு காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து சிறப்பு அபிஷேகத்தை இணையதளத்தில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்மூலம் ஏராளமான பக்தர்கள் வீட்டிலிருந்தே சிறப்பு அபிஷேகத்தை கண்டு வழிபட்டனர். இருப்பினும் சிலர் குடும்பத்தினருடன் சமயபுரம் கோவிலுக்கு வந்து கோவில் முன் சூடம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் அம்மனை நோக்கி பயபக்தியுடன் வணங்கிச் சென்றனர்.