இயற்கையாக இறந்தவர்களின் ஆன்மாவிற்கு எளிதில் முக்தி கிடைத்துவிடும். அகால மரணமடைந்தவர் ஆன்மா சாந்தியடைய இராமேஸ்வரத்தில் தில ஹோமம் செய்தால் துர்மரணமடைந்த ஆத்மாவை சாந்தியடைய செய்துவிடும்.
இயற்கையாக மரணித்து, முக்தி அடைந்தவரின் வீட்டில் சுப நிகழ்வு நடந்து கொண்டே இருக்கும். அகால மரணமடைந்த ஆத்மா முக்தி அடையும் வரை நல்ல காரியங்கள் நடைபெறுவதில் தடைகள் ஏற்படும். இதற்கு காரணம் ஆத்ம சாந்திக்கான கடமைகளை செய்யாமல் விடுவதுதான்.
முன்னோர்களின் ஆன்மாக்களை யாரும் பார்க்க முடியாது, ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கவும் முடியாது. எனவே பஞ்ச பூதங்களை யும், நவக்கிரகங்களையும் முன் நிறுத்தி உரிய மந்திரங்களோடு செய்யப்படும் தில ஹோமம், எத்தகைய துர்மரணமடைந்த ஆத்மாவையும் சாந்தியடைய செய்துவிடும். ஹோமம் செய்ய முடியாதவர்களுக்கு அமாவாசை வழிபாடு நல்ல பலன் தரும்.