கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு பஜனை, 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை மங்கள இசை, ஆன்மிக உரை, பக்தி இன்னிசை, இரவு அம்மன் வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரிவேட்டை 8-ந் தேதி நடக்கிறது.