அன்னபூரணி தேவியை அனைத்து தினங்களிலும் விரதம் இருந்து வழிபடலாம் என்றாலும் வாரத்தில் வருகின்ற செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.
அன்னபூரணியை விரதம் இருந்து வழிபட வேண்டிய தினங்கள்
பதிவு: ஆகஸ்ட் 20, 2019 10:30
அன்னபூரணி
மனிதருக்கு ஏற்படுகின்ற உடல் ரீதியான உணர்வுகளில் பசி மிகவும் பலம் வாய்ந்ததாகும். அதிலும் இந்தப் பசி என்கிற உணர்வு அதீத அளவில் மனிதர்களுக்கு ஏற்பட்டால் அவர்கள் எத்தகைய தீய செயல்களைச் செய்வதற்குத் தயங்க மாட்டார்கள்.
எனவே தான் ஞானிகள் பசியை ஒரு நோயாக கருதி பசிப்பிணி என்கின்றனர். உலகத்திற்கே படியளக்கும் தெய்வமாக இருப்பவர் தான் ஸ்ரீ அன்னபூரணி தேவி. அந்த அன்னபூரணி தேவியை நித்தம் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் உணவிற்கு கஷ்டப்படும் நிலை எப்போதும் ஏற்படாது.
மக்களின் உணவு பஞ்சத்தை போக்குவதோடு வாழ்வில் சகல விதமான நற்பலன்களை ஏற்படுத்தி தரவல்ல அன்னபூரணி தேவியை அனைத்து தினங்களிலும் விரதம் இருந்து வழிபடலாம் என்றாலும் வாரத்தில் வருகின்ற செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.
மேலும் நவராத்திரி காலத்திலும் அன்னபூரணி தேவிக்கு வித விதமான நைவேத்தியங்கள் வைத்து வழிபடுவதால் அந்நபர் மற்றும் அவரின் குடும்பத்திற்கு வாழ்வில் மிகுதியான நன்மைகள் ஏற்பட செய்யும் ஒரு சிறந்த வழிபாடாக இருக்கிறது.
Related Tags :