வாலாஜாபாத்தில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பழைய சீவரம் என்ற ஊரில் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் இருக்கிறது.
இதை நினைவுபடுத்தும் விதமாகத்தான், ஆண்டிற்கு ஒரு முறை, தை மாதம் 2-ம் நாள், காஞ்சியில் உள்ள வரதராஜப் பெருமாள், பாரிவேட்டை உற்சவமாக பழைய சீவரம் சென்று வருகிறார். பாலாற்றின் கரையில் உள்ள இந்த இடத்திற்குச் செல்ல முதல் நாள் இரவு 10 மணி அளவில் காஞ்சியில் இருந்து புறப்படுகிறார் வரதராஜப் பெருமாள். மறுநாள் (தை 2-ம் நாள்) பழைய சீவரம் மலை மீது எழுந்தருள்கிறார். அங்கு பகல் முழுவதும் இருந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்து விட்டு, மாலை நேரத்தில் மலையில் இருந்து இறங்கி இரவு 10 மணி அளவில் காஞ்சிபுரம் புறப்பட்டு, மறுநாள் காலையில் ஆலயம் வந்தடைகிறார்.