வாடிப்பட்டி நீரேத்தான் மந்தைதிடலில் பழமையும் பெருமையும் வாய்ந்த நவநீதபெருமாள்கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது.
நீரேத்தான் கிராம சாவடியில் இருந்து கிராம பெரியவர்கள் முன்னிலையில் மணமக்கள் அழைப்பு ஊர்வலம் நடந்தது. பின்னர் ஆண்டாள்-ரங்கமன்னார் திருக்கல்யாணம் நடந்தது.இதில் ஏராளமான பெண்கள், பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அர்ச்சகர்கள், கிராமபொதுக்கள் செய்திருந்தனர்.