சித்ரகுப்தனை வழிபடும் பொழுது “மலையளவு செய்த பாவத்தைக் கடுகளவாக மாற்றித் தரவும், கடுகு அளவாகச் செய்த புண்ணியத்தை மலையளவாக உயர்த்தித் தரவும்” என்று சொல்லி வழிபட வேண்டும்.
“சித்ர குப்தா! சித்ர குப்தா!
சேவித்தேன் நான் சித்ர குப்தா!
நானே செய்த பாவமனைத்தும்
நல்லவனே நீ கடுகளவாக்கு!
நானே செய்த புண்ணியமனைத்தும்
நல்லவனே நீ மலையளவாக்கு!
வானும், நிலவும் உள்ளவரைக்கும்
வாழ்க்கைப் பாதையை வளமாய் மாற்று!
உணவும் உடையும் உறைவிடம் அனைத்தும்
தினமும் வழங்கத் திருவருள் கூட்டு”
மேற்கண்ட சித்ரகுப்தனுக்குரிய வழிபாட்டுப் பாடலை பாடியும் அவரை துதிக்கலாம்.