கிறித்தவம்
புனித வனத்து அந்தோணியார் ஆலய சப்பர பவனி

புனித வனத்து அந்தோணியார் ஆலய சப்பர பவனி

Published On 2022-05-23 03:52 GMT   |   Update On 2022-05-23 03:52 GMT
மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் மிக்கேல் அதிதூதர், புனித வனத்து அந்தோணியார், அன்னை மரியாள், ஆரோக்கிய மாதா ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு ஆசீர் வழங்கினர்.
திருவாடானை தாலுகா நகரிகாத்தான் கிராமத்தில் புனித வனத்து அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு பங்குத்தந்தை சூசை மைக்கேல் தலைமையில் அருட்தந்தையர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆலய திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது.இதில் தினமும் நவநாள் திருப்பலி, சிறப்பு மறையுரை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலியை பங்குத்தந்தை சூசை மைக்கேல் தலைமையில் அருட்தந்தையர்கள் அந்தோணி பாக்கியம், சவரிமுத்து, நிர்மல், பவுல்ராஜ் கஷ்மீர் ஆகியோர் நிறைவேற்றினர்.அதனைத் தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் மிக்கேல் அதிதூதர், புனித வனத்து அந்தோணியார், அன்னை மரியாள், ஆரோக்கிய மாதா ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு ஆசீர் வழங்கினர்.

நேற்று காலை திருவிழா நிறைவு திருப்பலி, புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கொடி இறக்கமும் நடைபெற்றது.இதனையொட்டி ஆலயம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
Tags:    

Similar News