கிரிக்கெட்

டிஎன்பிஎல் கிரிக்கெட்- நெல்லை ராயல் கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றி

Update: 2022-06-30 14:35 GMT
  • முதலில் ஆடிய திண்டுக்கல் அணி 12 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் சேர்த்தது.
  • பாபா அபராஜித், சஞ்ய் யாதவ் இருவரும் அதிரடியாக ஆடி ஆட்டத்தை முடித்தனர்.

திண்டுக்கல்:

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதினன. மழை காரணமாக போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

முதலில் ஆடிய திண்டுக்கல் அணி திண்டுக்கல் அணி 12 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய விஷால் வைத்யா, 21 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 45 ரன்கள் குவித்தார். ஹரி நிஷாந்த் 27 பந்துகளை எதிர்கொண்டு, 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 37 ரன்கள் விளாசினார். நெல்லை தரப்பில் ஸ்ரீ நிரஞ்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை அணி, 6 பந்துகள் மீதமிருந்த நிலையில் 133 ரன்கள் குவித்து வெற்றியை எட்டியது. துவக்க வீரர் நிரஞ்சன் 18 ரன்னிலும், சூர்யபிரகாஷ் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் பாபா அபராஜித், சஞ்ய் யாதவ் இருவரும் அதிரடியாக ஆடி ஆட்டத்தை முடித்தனர். பாபா அபராஜித் 59 ரன்களும் (நாட் அவுட்), சஞ்சய் யாதவ் 55 ரன்களும் (நாட் அவுட்) விளாசினர். இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணி வெற்றி பெற்றது.

இதன்மூலம் நெல்லை ராயல் கிங்ஸ் அணி, நடப்பு சீசனில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. தனது முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியையும், 2வது ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்சையும் தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம் நெல்லை அணி, புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

Tags:    

Similar News