தரவரிசை
விமர்சனம்

இரண்டு பெண்களிடம் சிக்கி தவிக்கும் விஜய் சேதுபதி - காத்துவாக்குல ரெண்டு காதல் விமர்சனம்

Published On 2022-04-28 01:25 GMT   |   Update On 2022-04-28 04:59 GMT
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் விமர்சனம்.
நாயகன் விஜய் சேதுபதி பிறந்ததிலிருந்து துரதிஷ்டசாலியாக இருக்கிறார். இவர் வாழ்க்கையில் எல்லாம் நேருக்கு மாறாக நடக்கிறது. இவர் பகலில் கார் டிரைவராகவும் இரவில் பவுன்சராகவும் வேலை பார்த்து வருகிறார்.

டிரைவராக வேலை செய்யும்போது நயன்தாராவையும், பவுன்சர் வேலை செய்யும்போது சமந்தாவையும் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த காதல் பிரச்சனையாக மாறுகிறது. இறுதியில் விஜய் சேதுபதி காதல் பிரச்சனையை எப்படி சமாளித்தார்? நயன்தாரா, சமந்தா இருவரில் யாருடன் காதலில் ஒன்று சேர்ந்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.



நாயகன் விஜய் சேதுபதி, ராம்போ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். சின்ன சின்ன அசைவுகள் மற்றும் முக பாவனைகளில் கூட அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். குடும்ப பெண்ணாக ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் நயன்தாரா. மாடர்ன் பெண்ணாக நடித்து அசத்தி இருக்கிறார் சமந்தா. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா காம்பினேஷன் சீன்களில் மூன்று பேருமே போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள். மாறன், கிங்ஸ்லி ஆகியோர் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள்.



இரண்டு காதலை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். இரண்டு காதல் வைத்து பார்ப்பவர்களை நெருடல் இல்லாமல் ரசிக்க வைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன். காமெடி காட்சிகள் ஆங்காங்கே கைகொடுத்து இருக்கிறது.



படத்திற்கு பெரிய பலம் அனிருத்தின் இசை. பின்னணி இசையில் மாஸ் காண்பித்து இருக்கிறார். பாடல்கள் அனைத்தும் சூப்பர்.  ஸ்ரீதரின் ஒளிப்பதிவோடு பார்க்கும்போது கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.

மொத்தத்தில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' கலகலப்பான காதல்.
Tags:    

Similar News