சினிமா
பகவான் படத்தின் போஸ்டர்

பகவான்

Published On 2021-09-12 18:16 IST   |   Update On 2021-09-12 18:16:00 IST
காளிங்கன் இயக்கத்தில் ஆரி அர்ஜுனன், பூஜிதா பொன்னாடா நடிப்பில் உருவாகி இருக்கும் பகவான் படத்தின் முன்னோட்டம்.
இயக்குனர் காளிங்கன் இயக்கத்தில் அம்மன்யா மூவீஸ் சார்பில் சி.வி.மஞ்சுநாதா தயாரிக்கும் திரைப்படம் “பகவான்”. மித்தாலஜிகல் திரில்லர் வகையில் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஆரி அர்ஜுனன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் பரபர திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. 

இப்படத்தில் ஆரி அர்ஜுனனுக்கு ஜோடியாக ‘ரங்கஸ்தலம்’ படத்தின் நாயகி பூஜிதா பொன்னாடா நடிக்கிறார். இவர்களுடன் ஜெகன், முருகதாஸ், யோக் ஜேபி, சம்பத் ராம், லக்கி நாராயணன், அலெக்ஸ், அபிஷேக், சத்யா, “மாஸ்டர்” பாண்டி, அஜய் தத்தா ஆகியோர் முக்கியபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 


ஆரி அர்ஜுனன்

இப்படத்தில் ஆங்கில நடிகர் ஜேம்ஸ் பாரட் வில்லனாக நடிக்கிறார். பிரசன் பாலா இசையமைத்துள்ள இப்படத்துக்கு முருகன் சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அதுல் விஜய் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Similar News