சினிமா செய்திகள்

விஜய்

null

வாரிசு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காப்பியா? விளக்கம் அளித்த ஓட்டோ..

Update: 2022-06-25 08:46 GMT
  • வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'வாரிசு'.
  • இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'வாரிசு'. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் குடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதையடுத்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

வாரிசு ஃபர்ஸ்ட் லுக்

இந்நிலையில், வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஓட்டோ நிறுவனத்தின் விளம்பரத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்று சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்று வைரலானது. தற்போது இந்த புகைப்படத்திற்கு ஓட்டோ நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

ஓட்டோ விளக்கம்

அதில், " ஓட்டோவில், நாங்கள் அறிவுசார் சொத்துரிமை மீறலை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். மேலே உள்ள படம் எந்த வகையிலும் ஓட்டோவுடன் தொடர்புடையது அல்ல. மேலும், பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக மட்டுமே சில மீம் கிரியேட்டர்களால் உருவாக்கப்பட்டது. வாரிசு அணிக்கு எங்கள் தரப்பில் இருந்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்' என்று தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News