சினிமா செய்திகள்

சஷ்தி குறும்படம்

விருதுகளை குவித்த 'சஷ்தி' குறும்படம்.. குவியும் பாராட்டுக்கள்

Published On 2022-08-19 12:10 GMT   |   Update On 2022-08-19 12:10 GMT
  • தாய்க்கும் மகனுக்குமான பிணைப்பை மையப்படுத்தி உருவாகியுள்ள குறும்படம் ‘சஷ்தி’.
  • இந்த குறும்படம் 25 திரைப்பட விழாக்களில் 59 விருதுகளை வென்றள்ளது.

கேத்தி மற்றும் ராப்பி பிலிம்ஸ் சார்பில் தயாராகியுள்ள குறும்படம் 'சஷ்தி'. ஜூட் பீட்டர் டேமியான் இந்த குறும்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். இதில் செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி, மாஸ்டர் ஜெப்ரி ஜேம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த குறும்படம் ஆகஸ்ட்-15ஆம் தேதி ஐ ட்யூன்ஸ் மற்றும் கூகுள் பிளே ஆகியவற்றில் வெளியாகி உள்ளது.

சஷ்தி குறும்படம்

 

லைவ் ஆடியோ ரெக்கார்டிங் முறையில் உருவாகியுள்ள இந்த குறும்படம், தாய்க்கும் மகனுக்குமான உறவை மையப்படுத்தி வெளியாகி உள்ளது. இந்த 'சஷ்தி' குறும்படம் டோக்கியோ முதல் டொராண்டோ வரை, 25 திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் 59 விருதுகளை வென்றுள்ளது. பல்வேறு விருதுகளை பெற்று வரும் இந்த குறும்படத்திற்கு பலரின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Tags:    

Similar News