சினிமா செய்திகள்

சந்தானம்

null

படப்பிடிப்பை நிறைவு செய்த சந்தானம்.. கவனம் ஈர்க்கும் புகைப்படம்..

Update: 2022-07-01 06:04 GMT
  • இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் சாண்டா 15.
  • இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தன்யா போப் இணைந்துள்ளார்.

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சாண்டா 15. பெயரிடப்படாத இப்படத்தை புரொடக்‌ஷன் எண்10 (சாண்டா 15) என்று தயாரித்துள்ளனர்.

சந்தானத்தின் 15-வது திரைப்படமாக தயாராகி உள்ள இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


சாண்டா 15 படக்குழு

ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். இதையடுத்து சாண்டா 15 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை புகைப்படங்களை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனங்களை ஈர்த்து வருகிறது. மேலும் இப்படத்தின் அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News