சினிமா செய்திகள்

சமந்தா

null

ஹேக் செய்யப்பட்ட சமந்தாவின் சமூகவலைதளம்? குழப்பத்தில் ரசிகர்கள்..

Update: 2022-07-05 08:12 GMT
  • சமந்தாவின் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
  • சமந்தா நடித்துள்ள சகுந்தலம், யசோதா படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளன.

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை சமந்தா. இவர் நடித்த "காத்துவாக்குல ரெண்டு காதல்" திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடல் மெகா ஹிட்டாகி புஷ்பா படத்திற்கு பலம் சேர்த்தது.


சமந்தா

இதையடுத்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள யசோதா, சகுந்தலம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளன. தி ஃபேமிலி மேன் 2 வெப்தொடரில் படு போல்டாக ராஜி கதாபாத்திரத்தில் நடித்த சமந்தா, தொடர்ந்து பிரபல பிராண்டுகளுக்கு விளம்பர தூதுவராகவும் மாடலாகவும் நடித்து அசத்தி வருகிறார். இவ்வாறு பான் இந்தியா நடிகையாக வலம் வரும் சமந்தா படங்களில் பிசியாக இருந்தாலும் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.

இந்நிலையில், நேற்று சமந்தாவின் சமூகவலைதளத்தில் அறிமுகமும் இல்லாத நபரின் புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த ரசிகர்கள் சமந்தாவின் சமூக வலைதளப்பக்கம் ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து வந்தனர்.


விளக்கமளித்த சமந்தா மேனேஜர்

அதன் பின்னர், இதுகுறித்து விளக்கமளித்த சமந்தாவின் மேனேஜர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடிகை சமந்தாவின் சமூக வலைதளப்பக்கத்தில் அந்த பதிவு தவறுதலாக பதிவாகி உள்ளது என்றும் தற்போது அது சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் கூறி இருந்தார். இதையடுத்து சமந்தாவின் சமூக வலைதளப்பக்கம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

Tags:    

Similar News