சினிமா செய்திகள்

என்.டி.பிரசாத்

பிரபல மலையாள நடிகர் தற்கொலை.. அதிர்ச்சியில் திரையுலகம்

Update: 2022-06-28 06:02 GMT
  • ஆக்சன் ஹீரோ பிஜு என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் என்.டி.பிரசாத்.
  • இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான திரைப்படம் ஆக்சன் ஹீரோ பிஜு. ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற இந்த படத்தில் வில்லனாக நடித்தவர் என்.டி.பிரசாத். 43 வயதாகும் இவர் இதுதவிர இபா மற்றும் கர்மானி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கொச்சி அருகே கலமசேரி பகுதியில் அவர், வீட்டுக்கு வெளியே மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அவரது குழந்தைகள் கவனித்து அருகே வசிப்பவர்களிடம் இதுபற்றி கூறியுள்ளனர். உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்.டி.பிரசாத்

என்.டி.பிரசாத். மனஉளைச்சல் மற்றும் குடும்ப காரணங்களால் தற்கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்து உள்ளனர். கடந்த சில மாதங்களாக அவரது மனைவியும் உடனில்லை என்றும் மரணத்திற்கு சில நாட்கள் முன்பு அவர் அதிக மனஅழுத்தத்தில் இருந்துள்ளார் எனவும் போலீசார் கூறியுள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இவரின் மறைவிற்கு திரையுலகினர் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2021ம் ஆண்டு பிரசாத் மீது, கஞ்சா உள்ளிட்ட பிற வகை போதை பொருட்களை வைத்ததற்காக கலால் துறை கைது நடவடிக்கை எடுத்தது. அவரிடம் இருந்து கொடிய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News