சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன்

சோழா சோழா.. வைரலாகும் பொன்னியின் செல்வன் பாடல்

Published On 2022-08-19 12:48 GMT   |   Update On 2022-08-19 12:48 GMT
  • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1.
  • பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ் படம்.

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்"பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

 

பொன்னியின் செல்வன்

முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் முதல் பாடல் "பொன்னி நதி" அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் இப்படத்தின் இரண்டாவது பாடல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது.

 

பொன்னியின் செல்வன்

இந்நிலையில், அறிவித்தபடி "பொன்னியின் செல்வன்" படத்தின் இரண்டாம் பாடலான சோழா சோழா பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.


Full View


Tags:    

Similar News