சினிமா செய்திகள்

ஆராதனா

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா - தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா

Update: 2022-08-09 16:48 GMT
  • செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
  • இதில் நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்.

சென்னை:

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி கடந்த 10-நாட்களுக்கு மேல் நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தலைவர் மற்றும் அமைச்சர்கள் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.


Full View


இந்நிலையில், நிறைவு விழாவின் முதல் நிகழ்ச்சியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதானாவும் பங்கேற்று தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாடினார்.

தொடர்ந்து நிறைவு விழாவில் கண்கவர் இசை நிகழ்ச்சி, விருது வழங்கும் விழாவும் கோலாகலமாக நடைபெற்றது.

Tags:    

Similar News