சினிமா செய்திகள்
பிந்து மாதவி

பிக்பாஸ் டைட்டிலை தட்டி சென்ற பிந்து மாதவி

Update: 2022-05-22 10:16 GMT
வெப்பம், கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2 படத்தில் நடித்து பிரபலமடைந்த பிந்து மாதவி பிக்பாஸ் டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இந்தியா முழுவதும் பிரபலமடைந்த இந்த நிகழ்ச்சி பல மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா அக்கினேனி தொகுத்து வழங்கினார். இதன் கிராண்ட் ஃபினாலேவில் பிந்து மாதவி, அகில் சர்தக், அரியானா குளோரி, அனில் ரத்தோட், பாபா பாஸ்கர், மித்ரா சர்மா மற்றும் ஷிவா உள்ளிட்டோர் இறுதிப் போட்டியில் இருந்தனர்.


பிந்து மாதவி

இதன் இறுதி நிகழ்ச்சியில் வெகு சிறப்பாக நடந்தது. இதில் சுனில், மெஹ்ரீன் பிர்சாடா, அதிவி சேஷ், சாய் மஞ்ச்ரேக்கர் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதன் இறுதி போட்டியில் நடிகை பிந்து மாதாவி முதல் இடத்தை பிடித்து ரூ.50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தட்டிச்சென்றார். மேலும், அகில் சார்தக் ரன்னரப்பாகவும், தொகுப்பாளர் ஷிவா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். 


பிந்து மாதவி

வெப்பம் படத்தின் மூலம் அறிமுகமான பிந்து மாதவி, பிறகு கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2 என பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தமிழில் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News