சினிமா செய்திகள்
சங்கீதா சஜித்

பிரபல பாடகி சங்கீதா சஜித் மரணம்

Update: 2022-05-22 08:47 GMT
தமிழ் திரையுலகின் முன்னணி பாடகி சங்கீதா சஜித் உடல்நலக் குறைவால் திடீர் மரணமடைந்தார்.
கேரளாவைச் மாநிலத்தை சேர்ந்தவர் பிரபல பின்னணி பாடகி சங்கீதா சஜித். இவர் தமிழில் மிஸ்டர் ரோமியா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம்பெற்ற ’தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை’ உட்பட பல்வேறு ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். இவரின் தனித்துவ குரலால் ரசிகர்களை கவர்ந்து இவரின் பாடல்கள் மூலம் அனைவரையும் தன்வசப்படுத்தி வைத்திருந்தார்.


சங்கீதா சஜித்

கர்நாடக இசைக் கலைஞராகவும் அறியப்பட்ட சங்கீதா சஜித், முன்னணி இசை அமைப்பாளர்கள் மற்றும் பாடகர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். கடந்த சில மாதங்களாக சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், திருவனந்தபுரத்தில் உள்ள தன் சகோதரி வீட்டில் தங்கி அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார்.


சங்கீதா சஜித்

இந்நிலையில் இன்று(22.05.2022) காலை அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 46. அவருடைய இறுதிச் சடங்கு இன்று மாலை நடக்க இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சங்கீதாவின் திடீர் மறைவால் இசையுலகம் அதிர்ச்சியடைந்திருக்கிறது. இசைக்கலைஞர்கள் ரசிகர்கள் என பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News