சினிமா செய்திகள்
தீபிகா படுகோனே

கேன்ஸ் விழாவில் நடனம் ஆடிய தீபிகா படுகோனே

Update: 2022-05-21 08:14 GMT
இன்றைய சூழலில் இந்திய சினிமா உலகின் உச்சத்தில் இருக்கிறது என்று தீபிகா படுகோனே கூறினார்.
பிரான்சில் நடைபெற்று வரும் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைத்துறையினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விழாவில் தீபிகா படுகோனே ஒரு நடுவராக அமர்த்தப்பட்டிருக்கிறார்.

இந்தியா கவுரவமான நாடு என்று அதற்கான முக்கியத்துவத்தை கேன்ஸ் அமைப்பினர் தெரிவித்திருக்கிறார்கள். இந்த விழாவில் தான்சானியா கிராமிய பாடகர் மேமே கான் ஒரு பாடலைப் பாட ஆரம்பித்திருக்கிறார்.  அப்போது அங்கிருந்த தீபிகா, தமன்னா பாட்டியா, பூஜா ஹெக்டே ஆகியோர் அந்தப் பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார்கள்.

இதுபற்றி தீபிகா கூறியதாவது, இன்றைய சூழலில் இந்திய சினிமா உலகின் உச்சத்தில் இருக்கிறது. நான் கேன்ஸ் விழாவில் கலந்து கொள்வேன் என்று நினைத்ததுகூட இல்லை. ஆனால் இன்று இருக்கும் நிலையில் நாளை இந்தியாவிலேயே கேன்ஸ் போல் திரைப்பட விழா நடந்தாலும் நடக்கும் என்றார் தீபிகா படுகோனே.
Tags:    

Similar News