சினிமா செய்திகள்
அருள்நிதி

அருள்நிதி படத்தின் புதிய அப்டேட்

Update: 2022-05-19 12:09 GMT
தமிழ் திரையுலகில் மாறுபட்ட திரைக் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அருள்நிதி, தற்போது நடித்திருக்கும் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் மாறுபட்ட திரைக் கதைகளை தேர்வு செய்வதில் பெயர் பெற்ற நடிகர் அருள்நிதி. 'களத்தில் சந்திப்போம்' படத்தை தொடர்ந்து 'டைரி', 'டி ப்ளாக்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கி இருக்கும் 'தேஜாவு' படத்தில் நடித்து முடித்துள்ளார். மிஸ்டரி த்ரில்லராக உருவாகி இருக்கும் இப்படத்தில் மதுபாலா, அச்சுத குமார், ஸ்முருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இப்படத்தினை வைட் கார்பெட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்து வருகிறார். அவருடன் இணைந்து பி.ஜி.மீடியா ஒர்க்ஸ் சார்பில் பி.ஜி.முத்தையா இணை தயாரிப்பை மேற்கொள்வதுடன், ஒளிப்பதிவையும் கையாண்டு வருகிறார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, படத்தொகுப்பாளராக அருள் இ சித்தார்த் பணியாற்றி வருகிறார். 


தேஜாவு

தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'தேஜாவு' படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.  
Tags:    

Similar News