சினிமா செய்திகள்
நயன்தாரா - ஓ-2

12 மணி நேரம் உயிரோட இருக்கலாம்.. வைரலாகும் நயன்தாரா பட டீசர்

Published On 2022-05-16 08:16 GMT   |   Update On 2022-05-16 08:16 GMT
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடித்துள்ள அடுத்த படத்தின் டீசர் வைரலாகி வருகிறது.
'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை தொடர்ந்து, நயன்தாரா நடித்து முடித்திருக்கும் அடுத்த படம் ‘ஓ-2’  என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. ஜி.கே.விக்னேஷ் என்பவர் இயக்கி இருக்கும் இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட இருக்கிறார்கள். டிரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது.


நயன்தாரா - ஓ2

விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சினைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை பேருந்தில் சக பயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான் “ஓ-2”. தமிழ்நாடு, கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.” இந்த படத்தில் அம்மா பார்வதியாக நயன்தாரா நடிக்கிறார்.


இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. விறுவிறுப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Tags:    

Similar News