சினிமா செய்திகள்
ஆர்.ஆர்.ஆர்.

பிரபல நடிகர் படம் பற்றி பொதுத்தேர்வில் கேள்வி

Update: 2022-05-13 12:19 GMT
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். படம் குறித்து பொதுத்தேர்வில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். படம் வெற்றிகரமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இப்போதும் ஆந்திராவில் ஒரு சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தை பற்றி தெலுங்கு பொதுத்தேர்வில் கேள்வி ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் ​​‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தையும், கொமரம் பீமாக ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பையும் பார்த்திருப்பீர்கள். 


ஆர்.ஆர்.ஆர்.

படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, பிரபல டிவி சேனலில் நீங்கள் நிருபராக இருக்கும் போது, ஜூனியர் என்.டி.ஆரை நேர்காணல் செய்யும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால் எந்த மாதிரியான கேள்விகளை கேட்பீர்கள் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை மையமாக வைத்து சிந்தித்து பாருங்கள். கதை நடக்கும் களம், திரைக்கதை கொமரம் பீம் பற்றி என்று ஐந்து கேள்விகள் கேட்கப்பட்டிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. 
Tags:    

Similar News