சினிமா செய்திகள்
கமல்ஹாசன் - சூர்யா

கமலின் விக்ரம் படத்தில் சூர்யா.. வைரலாகும் வீடியோ

Published On 2022-05-12 07:39 GMT   |   Update On 2022-05-12 07:39 GMT
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தில் சூர்யா நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
மாநகரம் படத்தில் அறிமுகமாகி பின்னர் கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ். கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கமலின் 232வது படமான ‘விக்ரம்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வரும் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது. 


கமல்ஹாசன் - சூர்யா

இதற்கிடையில் ‘விக்ரம்’ படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக பேசப்பட்டது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் கமல் மற்றும் சூர்யா இருவரும் சந்தித்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் இதன்மூலம் சூர்யா ‘விக்ரம்’ படத்தில் நடித்திருப்பது உறுதியாகி உள்ளது என்று பதிவிட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News